Uncategorizedஉள்நாட்டு செய்திகள்வணிக செய்திகள்

கறுவா ஏற்றுமதி மூலம் 2018 இல் 35000 மில்லியன் வருமானம்

கடந்த 2018ம் ஆண்டு கறுவா ஏற்றுமதி மூலம் 35000 மில்லியன் ரூபாய் ஏற்றுமதி வருமானம் கிடைத்துள்ளதாக விவசாய ஏற்றுமதித் திணைக்கள பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.பீ. ஹீன்கெந்த தெரிவித்தார்.

கண்டி கெட்டம்பே பேராதனை வீதியில் அமைந்துள்ள விவசாய ஏற்றுமதித் திணைக்களத்தில் இடம்பெற்ற சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

கறுவா, வாசனைத்திரவிய ஏற்றுமதி மூலம் பெருமளவு வெளிநாட்டு செலாவணியை உள்வாங்க முடிந்தது.  உலக நாடுகளில் உற்பத்தி செய்யப்படும் கறுவாவைப் விட இலங்கை உற்பத்திகள் தரம் உயர்ந்ததாகவும் மணம், வாசனை என்பன உயர்தரத்தில் காணப்படுவதாலும் அதிகளவில் ஏற்றுமதி செய்ய முடிகிறது.

2018ம் ஆண்டு மொத்தம் 17500 மெற்றிக்தொன் கறுவா ஏற்றுதி செய்யப்பட்டது.  2017ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் உற்பத்தியில் 5.5 % வளர்ச்சியைக் காட்டியுள்ளது.
இது முன்னெப்போதும் இல்லாத வகையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியாகும்.

அதே போல் ஏற்றுமதியுடன் ஒப்பிடும் போது 2017ம் ஆண்டை விட 13 % அதிகமாக உள்ளது. இலங்கையின் மொத்த உற்பத்தியில் 55 சதவீத்ததை மெக்சினோ அரசே கொள்வனவு செய்கிறது.

இலங்கையிலிருந்து பல்வேறு வகையான விவசாயப் பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்ட போதும் கறுவா ஏற்றுமதி மூலம் வருவாய் 54 % பெறப்பட்டுள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை கறுவா உற்பத்தி தொடர்பான மேலதிக விபரங்களுக்கு- 0718168346 இந்த இலக்கத்தினூடாக தொடர்பு கொள்ள முடியும் என குறிப்பிடப்பட்டுள்ளது

கருத்து தெரிவிக்க