உள்நாட்டு செய்திகள்புதியவை

சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக வைத்தியாசாலைக்கு ஜனாதிபதி விஜயம்!

சீன – இலங்கை நட்புறவு தேசிய விஷேட வைத்தியாசாலையின் நிர்மாணப்பணிகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று திங்கட்கிழ்மை 17ஆம் திகதி நேரில் சென்று பார்வையிட்டார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2015ஆம் ஆண்டு மார்ச் மாதம் சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின் போது, சீன ஜனாதிபதி ஷீ ஜின் பிங்குடன் மேற்கொண்ட கலந்துரையாடலின் பயனாக சீன அரசாங்கத்தின் அன்பளிப்பில் இந்த சிறுநீரக வைத்தியாசலை இலங்கைக்கு வழங்கப்பட்டது.

சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்ட நாடெங்கிலுமுள்ள மக்களுக்கு நீண்டகால தேவையாக இருந்த இந்த வைத்தியசாலை தெற்காசியாவில் மிகப்பெரும் சிறுநீரக வைத்தியசாலையாக பொலன்னறுவை பொது வைத்தியசாலைக்கு அருகில் நிர்மாணிக்கப்பட்டுவருகிறது.

நிர்மாணப்பணிகளை பார்வையிட அங்கு சென்ற ஜனாதிபதி, குறித்த நிர்மாணப்பணிகளை மேற்கொண்டுவரும் அதிகாரிகளுடன் கலந்துரையாடி அதன் முன்னேற்ற நிலைமைகளை கேட்டறிந்தார்.

இதன்படி, எஞ்சியுள்ள பணிகளையும் விரைவில் நிறைவு செய்து 2020 ஜூலை மாதம் 30ஆம் திகதி வைத்தியசாலையை பொதுமக்களிடம் கையளிக்க முடியுமென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன – இலங்கை நட்புறவு தேசிய சிறுநீரக விசேட வைத்தியசாலைக்கு 2018 ஜூலை 21ஆம் திகதி ஜனாதிபதியினால் அடிக்கல் நாட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்து தெரிவிக்க