ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதாக வதந்திகள் பரப்பப்பட்டுள்ளதாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க கவலை வெளியிட்டுள்ளார்.
அநுராதபுரத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மத வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் நட்பின் அடிப்படையிலும் சில பக்கச்சார்பான முறைகளின் அடிப்படையிலும் தெரிவு செய்யப்படுகின்றன எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
புலமைப் பரிசில் பரீட்சை, சாதாரண தர பரீட்சை போன்றவற்றில் சித்தியடைந்த மற்றும் தொழில்சார் கல்வியை பூர்த்தி செய்தவர்களிடம் இம்முறை நாடு ஒப்படைக்கப்படும் எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க