நாட்டின் பாதுகாப்பு இன்னமும் உறுதிப்படுத்தப்படவில்லை என முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற விஷேட தெரிவுக்குழு முன்னிலையில், கடந்த வாரம் பாதுகாப்பு செயலாளர் வாக்குமூலம் வழங்கியிருந்தார். 99% மான தீவிரவாதிகளை கைது செய்துள்ளதாக அவர் கூறியிருந்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் முன்னாள் அமைச்சர் சரத் பொன்சேகா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
சவுதியில் ஐவரும் கண்டியில் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தற்கொலை தாக்குதல் மேற்கொள்ள பயிற்சி பெற்றவர்கள் எனவும் அவர் குற்றம்சுமத்தியிருந்தார்.
இதன்படி, தான் தீவிர அச்சுறுத்தல் முற்றாக நீங்கிவிட்டதாக கூறமாட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து தெரிவிக்க