ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் இணைந்தே ஜனாதிபதி வேட்பாளரை தீர்மானிப்பார்கள் என ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி. திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கண்டியில் நேற்று சனிக்கிழமை 15ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்ட எஸ்.பி.திஸாநாயக்க, ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
சஜித் பிரேமதாஸவின் பெயரையோ, கருஜயசூரியவின் பெயரையோ அல்லது ரணில் விக்ரமசிங்கவின் பெயரையோ ஜனாதிபதி வேட்பாளருக்காக ஐக்கிய தேசிய கட்சி பரிந்துரைக்க வில்லை என்றும் குறிப்பிட்டார்.
மேலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க பிரதமர் ரணில் விக்ரமசிங்க தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார் என்றும் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதி வேட்பாளராக யாரை களமிறக்கினாலும் நிச்சயமாக தோற்கடிப்போம். ஜனாதிபதித் தேர்தலில் பாரிய வெற்றியடைவோம் என்பது மட்டுமே உறுதியாகக் கூறமுடியும் எனவும் எஸ்.பி. திசாநாயக்க கூறினார்.
கருத்து தெரிவிக்க