பொசன் பூரணை தினத்தையொட்டி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் இன்று ஞாயிற்றுக்கிழமை வாழ்த்து செய்தியினை வெளியிட்டுள்ளனர்.
கருணை, அமைதி, நல்லிணக்கம் ஆகிய நற்பண்புகளை சிந்தையில் இருத்தவேண்டிய தருணம் இதுவாகும். ஒட்டுமொத்த இலங்கையர்களினதும் பொசன் பௌர்ணமி தின உறுதிமொழியாக இது அமைய வேண்டும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
ஆத்மீக மலர்ச்சியையும் வளமான கலாசாரத்யைும் பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமையாகும். அதற்கான ஆற்றலும் அறிவும் கிட்டும் பொசன் பௌர்ணமி தினமாக இன்றைய தினம் அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இந்த உயரிய பொசன் பூரணை தினத்தில் உண்மையான தர்மத்தின் ஆழமான உயர்ந்த பெறுமானங்கள் தொடர்பாக கவனம் செலுத்த வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.
தீவிரவாத சக்திகள் செயற்படுகின்ற இவ்வாறான காலப்பகுதியில் மென்மேலும் சிறப்பாக தர்மத்தைப் பின்பற்றி, மனிதாபிமானத்தைக் கட்டியெழுப்புவதற்கு ஒன்றிணைய வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
சிறந்த முன்மாதிரியுடன் ஏனைய சமயங்கள் மற்றும் கலாசாரங்களுக்கு மதிப்பளித்து நல்லிணக்கத்துடன் வாழ அனைவரது உள்ளங்களும் ஞானத்தினால் நிரம்ப வேண்டும் என பிரதமர் கூறியுள்ளார்.
கருத்து தெரிவிக்க