உள்நாட்டு செய்திகள்புதியவை

அகதிகளை திருப்பி அனுப்பும் திட்டத்தை இலங்கை கைவிட வேண்டும்-மன்னிப்பு சபை

நாட்டில் உள்ள அகதிகளை திருப்பி அனுப்பும் செயற்பாட்டை இலங்கை உடனடியாக நிறுத்த வேண்டும் என சர்வதேச மன்னிப்பு சபை வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் அகதிகளாக உள்ள பாகிஸ்தானின் சிறுபான்மை மதத்தவர்களான கிறிஸ்தவர்கள் மற்றும் ஷியா மக்கள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் நிர்ப்பந்தமாக இடம்பெயர வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

இவர்கள் மீண்டும் தமது சொந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படும் ஆபத்து காணப்படுகின்றது. இது சர்வதேச சட்டங்களை மீறும் செயற்பாடாகும் என மன்னிப்பு சபை தெரிவிக்கின்றது.

சர்வதேச மன்னிப்பு சபையின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் பிராஜ் பட்நாயக் இது தொடர்பாக தெரிவிக்கையில்,

குறித்த அகதிகளை வலுக்கட்டாயமாக திருப்பி அனுப்பும் திட்டம் இலங்கை அரசாங்கத்தால் நிறுத்தப்பட வேண்டும். அவர்கள் இருமுறை இடம்பெயர வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

சொந்த இடத்தில் இருந்து பாதுகாப்பிற்காக வந்து மீண்டும் அங்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இவ்வாறு தஞ்சம் அடைந்தவர்களை மீண்டும் அனுப்புவது சர்வதேச சட்டங்களை மீறும் செயற்பாடாகும் என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் தஞ்சம் அடைந்துள்ள அகதிகள் உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பழிவாங்கப்படும் தரப்பாக உள்ளனர் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க