விளையாட்டு செய்திகள்

அவுஸ்திரேலிய நிறுவனத்திற்கு எதிராக சச்சின் வழக்கு

அவுஸ்திரேலிய கிரிக்கட் மட்டை தயாரிப்பு நிறுவனத்திடம் 20 இலட்சம் டொலர் உரிமத்தொகை கோரி சச்சின் டெண்டுல்கர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்பர்டான் ஸ்போர்ட்ஸ் இண்டர்நேஷனல் என்ற நிறுவனம் தனது பெயர் மற்றும் லோகோவை பயன்படுத்த வருடத்திற்கு 10 இலட்சம் டொலர் பெறுமதியை வழங்க 2016-ஆம் ஆண்டு ஒப்பந்தமிட்டது. ஆனால் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல் அந்த நிறுவனம் ஒப்பந்தப்படி குறித்த தொகையை தரமறுத்து வருகிறது.

இது குறித்து அந்த நிறுவனத்திடம் விளக்கம் கோரப்பட்டது. எனினும் அதற்கு பதிலளிக்க மறுத்த ஸ்பர்டான் நிறுவனம் எனது பெயர் மற்றும் புகைப்படங்களை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.

இதையடுத்தே அந்த நிறுவனத்திற்கு எதிராக வழக்கு தொடர்ந்திருப்பதாக சச்சின் தெரிவித்துள்ளார்.

கருத்து தெரிவிக்க