உள்நாட்டு செய்திகள்புதியவை

மாலைத்தீவு சபாநாயகர் இலங்கை வருகிறார்!

மாலைத்தீவு முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய சபாநாயகருமான மொஹமட் நஷீட் இன்று வெள்ளிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

அவருடன் மாலைத்தீவு அரசாங்க உயர்மட்ட குழு ஒன்று மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில், கடந்த ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தையடுத்து, முதல் முறையாக மாலைதீவின் குறித்த உயர்மட்ட குழு இலங்கைக்கு விஜயம் செய்கின்றது.

இந்த விஜயத்தின் போது இரு நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு குறித்து அதிக கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கருத்து தெரிவிக்க