_ தமிழகத்திலிருந்து குணா
பூர்வ புண்ணிய இரகசியத்தை யும், ஆறு மற்றும் ஏழாம் இடங்களின் சுருக்கமான பொருளையும் சென்ற இதழில் பார்த்தோம்.
ஆனால் அவ்விரண்டு இடத்தைப்பற்றி சுருங்க சொல்லிவிட முடியுமா என்ன?அதிலும் 7மிடம் இருக்கிறதே, அது வாழ்வையே புரட்டிப்போடும அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்றுதான் சொல்ல வேண்டும். கி.மு. – கி.பி. என்பதுபோல பலரது வாழ்வையே தி.மு. – தி.பி. என்று பிரித்து விடலாம்.
அதாவது திருமணத்திற்கு முன் – திருமணத்திற்கு பின் என்று! திருமணம் சிலருக்கு யோகமாகவும் அமையலாம். சிலருக்கு சோகமயமாகவும் அமையலாம். மரணம்வரைகூட வருபவள்
மனைவி (அ) கணவன் என்பதால்தான் ஜோதிடத்தில் முக்கிய விதியான கேந்திரத்தில் அதை சேர்த்திருக்கிறார்கள். அதாவது, சென்ற வாரத்தில் நாம் பார்த்த திரிகோண கேந்திரத்தில் 5-மிடம் எவ்வளவு முக்கியமானதோ, அதுபோல கேந்திரத்தில்7-மிடம் மிகவும் முக்கியம்!
சரி, கேந்திரமென்றால் என்ன?கீழே தரப்பட்டிருக்கும் கட்டத்தை
கவனியுங்கள்! மேற்கண்ட 1,4,7, 10 ஆமிடங்களே கேந்திரம் என்பதாகும்.
திரிகோண கேந்திரம் என்பது 1, 5, 9. கேந்திரம் என்பது 1, 4, 7, 10 இரண்டிலும் பொதுவானது 1 ஆமிடம்! அந்த 1மிடமே நாம் ஆவோம். ஜோதிடத்தின் சு+ட்சமத்தைப் பாருங்கள்! நேற்று, இன்று, நாளை என முக்காலத்தையும் குறிக்கும் விதமாக, மூன்று தலைமுறைகளையும் ( 9மிடம் தகப்பன், 1-மிடம் மகன், 5-மிடம் பேரன்) திரிகோண கேந்திரத்தில் முக்கோண வடிவில் அடைத்து விட்டது ஜோதிடம்.! ஆனால், நாற்கோண கேந்திரத்தின் அர்த்தமோ வேறு! இந்த உலகம்
எப்படி நான்கு திசைகளைகொண்டு படைக்கப்பட்டு இருக்கிறதோ அதுபோல இந்த சதுரவடிவிலான ˜கேந்திரம்’ நாம், நம்முடையதாய், நம்முடைய வாழ்க்கை துணை மற்றும் நமக்கான தொழில் என்றாகிய நான்கு விஷயங்களை கொண்டு நமக்கான உலகத்தைப்படைக்கிறது!
பொதுவாக நாமும், நமது இல்லத்தவர்களும் ஜீவிக்க நாம் தேர்ந்தெடுக்கும் தொழிலோ அல்லது வேலையோ வாழ்வில் மிகவும் முக்கியமானதாகும்.
காரணம் நாம் செய்யும் தொழிலை வைத்துதான் சமூகத்தில் நமக்கென ஒரு அந்தஸ்து உருவாக்கப்படுகிறது என்பதை எவருமே மறுக்க முடியாது! ஆக திரிகோணகேந்திரம் நமது பரம்பரை யென்றால், நாற்கோண கேந்திரம் அதை மேம்படுத்தவும், செழிப் பூட்டவும் உதவுவதற்கு ஏற்படுத்தப்பட்ட அமைப்பு என்று ஜோதிடம் கூறுகிறது!
சிலர் வீட்டில் மதிக்கப்படமாட்டார்கள், ஆனால் தொழில் அல்லது வேலையி சிலர் வெளியில்மதிப்பற்று இருப்பர். சிலர் வெளியில் மதிப்பற்று இருப்பர்.
வீட்டில் சகல மரியாதையோடு இருப்பர். அதேநேரம் சமூகம், குடும்பம் என இரண்டிலும் ஒருசேர சிறப்புறுவது அரிதான விஷய மென்றாலும், இரண்டிலுமே துன்பப்படுகின்ற வர்களையும் நாம் பார்க்கத்தான் செய்கிறோம். ஆக, ஒருவர் வீட்ல எலியா- புலியா? அல்லது வெளியில புலியா..எலியா? என்று தீர்மானிப்பதெல்லாம் இந்த நாற்கோண கேந்திரத்தை வைத்துதான்! இந்த கேந்திர இடங்களுக்கு சனி வரும்போது நமது வாழ்க்கை எப்படிப்பட்டதாக அமையும்? அதிலும் குறிப்பாக எப்படிப்பட்டதாக அமையும்? அதிலும் குறிப்பாக ஏழில் சனி ˜திக்பலம்’ பெறுகிறது!
அதென்ன ’திக் பலம்’? ஜாதககட்டங்களில் மேஷராசி முதலாக மீன ராசிவரை உள்ள பனிரெண்டு பாவங்களில் குறிப்பிட்ட சிலஇடங்களில் சனி. செவ்வாய் முதலான கிரகங்கள் பலமடங்கு பலத்துடன் செயல்படுவதைதான் ˜திக் பலம்’ என்கிறது ஜோதிடம். இன்னும் விளங்க சொல்ல வேண்டுமானால் செவ்வாய் கிரகத்துக்கு ˜உத்தியோககாரன்’ என்ற சிறப்பு பெயர் உண்டு,
ஏனென்றால் செவ்வாய், நாம் சிறப்புற உழைப்பதற்கான ஆற்றலை வழங்க கூடியவர். ஒருவர் வேகத்துடன் வேலை செய்வதிலும்,
அடுத்தவரிடம் சிறப்புற வேலை வாங்க கூடியவராக இருக்க வேண்டுமென்றால் செவ்வாய் பலத்துடன் இருக்க வேண்டும்!
அப்படிபட்ட செவ்வாய் கிரகம் எங்கு ˜திக்பலம்’ அடைகின்றதென்றால், தொழில் ஸ்தானம், ஜீவனஸ்தானம் என்று சிறப்பிக்கப்படும்.
கேந்திரத்தில் ஒன்றாகிய 10- மிடத்தில்தான்!
10-ல் செவ்வாய் இருந்தால் அந்த ஜாதகர் வேலைகளில் சிறப்புடன் விளங்குவார் என்கிறது சோதிடம்! அதுபோல சனி
திக்பலத்துடன் விளங்குவது ஏழாம் இடத்தில்தான்!
இப்போது புரிகிறதா இந்த இடத்துக்கு சனிவந்தால் இவ்வளவு முக்கியத்துவத்தை ஏன் ஜோதிடம் கூறுகிறதென்று!
கணவனின் மானத்தை கற்பில் முடித்து வைத்திருக்கும் மனைவியின் ஸ்தானமும் இதுதான்! தன் வாழ்வியல் ஆதாரமாககணவன்
விளங்குவானா?அல்லது அவமானங்களை தந்து அல்லல் பட செய்யும் கணவன் அமைவானா என்று சொல்லும் ஸ்தானமும் இதுதான்! இன்னும் சொல்ல போனால் திருமணம் என்ற ஒன்று நம் வாழ்வில் இருக்கிறதா? இல்லையா? என்று தெரிவிக்கும் இடமும் இதுதான்!
இப்படியான இடத்துக்கு சனி வந்ததற்கான பலன்களையும், 6மிடத்துக்கும், 8ஆமிடத்துக்கும் உள்ள நூதன தொடர்பையும் அடுத்த இதழில் பார்ப்போம்! இது தொடரும் போடுவதற்கான யுக்தியல்ல! இந்த நூதன தொடர்பின் துப்பை (க்ளு) தருகிறேன் நீங்களே பரிந்து கொள்ளுங்கள்!
6மிடம் நோயை குறிப்பது .8மிடம் நம் ஆயுள் காலத்தை
தெரிவிப்பது! இப்போது புரிந்ததா,அந்த நூதன தொடர்பு?!
அடுத்த இதழில் பார்ப்போம்.
கருத்து தெரிவிக்க