நாடாளுமன்ற விஷேட தெரிவுக் குழு முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து மகிழ்ச்சியடைவதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
கடந்த ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக விஷேட நாடாளுமன்ற தெரிவுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பான வாக்குமூலங்களை கடந்த சில தினங்களாக குறித்த நாடாளுமன்ற தெரிவுக் குழு பதிவு செய்து வருகின்றது.
இந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ஹிஸ்புல்லாவிடமும், உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டன.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள சபாநாயகர், நாடாளுமன்ற செயற்குழுவால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் நாடாளுமன்றத்தினதும் அமைச்சரவையினதும் செயற்பாடுகளை குழப்பவில்லை எனவும் கூறியுள்ளார்.
உண்மையை அறிந்து கொள்ளுதல் மக்களின் ஜனநாயக ரீதியிலான உரிமை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டி இருந்தார்.
கருத்து தெரிவிக்க