யுனிசெப் அமைப்பின் மனிதாபிமான விருதுக்கு இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பிரியங்கா சோப்ரா 2006-ம் ஆண்டிலிருந்து ஐ.நா.வின் யுனிசெப் அமைப்பின் குழந்தைகள் உரிமைக்கான நல்லெண்ண தூதராக பணியாற்றினார்.
குழந்தைகள் நலனுக்கான சேவையை பாராட்டி, யுனிசெப் அமைப்பின் டேனி கே மனிதாபிமான விருதுக்கு நடிகை பிரியங்கா சோப்ரா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த விருது டிசம்பர் 3-ம் திகதி நியூயோர்க்கில் நடைபெறும் விழாவில் பிரியங்காவுக்கு வழங்கப்படுகிறது. விருதுக்கு தேர்வானது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள பிரியங்கா சோப்ரா, ஒவ்வொரு குழந்தையின் அமைதியான எதிர்காலம், சுதந்திரம் மற்றும் கல்வி உரிமைக்காக இந்த விருது போய் சேரட்டும் எனக் கூறியுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த நடிகர், பாடகர், நடன கலைஞரான டேனி கே, யுனிசெப் அமைப்பின் முதல் நல்லெண்ண தூதராவார். அவரை போலவே குழந்தைகள் நலனுக்காக பாடுபடுவோருக்கு ஆண்டு தோறும், டேனி கே விருதை ஐ.நா சபை வழங்கி வருகிறது.
கருத்து தெரிவிக்க