விவசாயிகளுக்கு பெருமளவு சேதத்தை ஏற்படுத்திய படைப்புழுவை ஒழிப்பதற்காக 7 வகையான கிருமிநாசினிகள் கண்டறியப்பட்டுள்ளன.
மஹஇலுப்பள்ளம விவசாய நிறுவனத்தில் முன்னெடுக்கப்பட்ட பரிசோதனை நடவடிக்கைகளின் போது இவை கண்டறிப்பட்டுள்ளதாக விவசாயத் திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.
இது குறித்த அறிவிப்பை அந்தத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி டப்யூ. எம். டப்யூ. வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.
இந்த வருட பெரும்போகத்தில் ஒரு இலட்சம் ஹெக்டேயர் நிலப்பரப்பில் சோளம் பயிரிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது படைப்புழு தாக்கம் ஏற்படுமாயின் குறித்த கிருமிநாசினிகளபை் பயன்படுத்த முடியும் என விவசாயிகளுக்கு விவசாயத் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
கருத்து தெரிவிக்க