அழகு / ஆரோக்கியம்

பொலிவான சருமத்திற்கு எளிமையான அழகுக் குறிப்புகள்

சிலருக்கு நகைகள் அணிவதால் கழுத்தைச் சுற்றி கருவளையம் ஏற்படும். இதற்கு கோதுமை மாவில் வெண்ணெய் சிறிதளவு கலந்து , கழுத்தைச் சுற்றி பூசி இருபது நிமிடங்கள் கழித்து குளிக்கவும். இதனை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் செய்து வந்தால் கருவளையம் மறைந்து விடும் .

நீரைக் கொதிக்க வைத்து அதனுள் பச்சை மஞ்சள் கிழங்கை அரைத்து போட்டு , கொதி நீரோடு கலந்து ஆவி பிடிக்கவும் . பின்னர் ஒரு கைப்பிடி அளவு துளசி இலையை அதனுள் இட்டு ஆவி பிடிக்கவும் . அதன் பின் எலுமிச்சை இலை அல்லது பாதி எலுமிச்சை சாறு சேர்த்து ஆவி பிடிக்கவும் . இவற்றை ஒன்றன் பின் ஒன்றாக செய்ததும் கடைசியில் ஐஸ் கட்டியால் முகம் கழுத்துப் பகுதியில் தேய்க்கவும் . இவ்வாறு செய்து வர சருமம் பொலிவடையும் .

உருளைக்கிழங்கை அவித்து அதனுடன் அப்பிள் சிறு துண்டு தோடம்பழச் சாறு , சிறிதளவு சீனியும் கலந்து மசித்து முகத்தில் பூசி இருபது நிமிடங்கள் கழித்து கழுவவும் . இதனை வாரத்தில் இரண்டு தடவைகள் செய்து வந்தால் முகம் பொலிவுறும் .

முட்டை வெள்ளைக் கருவுடன் சிறிதளவு ஒலிவ் எண்ணெய் விட்டு கலந்து முகத்தில் பூசி மசாஜ் செய்து வந்தாலும் முகம் பளபளப்பாக மாறும் .

கருத்து தெரிவிக்க