சிங்கப்பூர் மருத்துவமனையில் இதய அறுவைச் சிகிச்சை செய்து கொண்ட கோட்டாபய ராஜபக்ச மருத்துவமனையில் இருந்து வெளியேறியுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த மாத இறுதியில் மருத்துவ சோதனைக்காக நீதிமன்ற அனுமதியுடன் கோட்டாபய ராஜபக்ச சிங்கப்பூருக்குச் சென்றிருந்தார்.
சிங்கப்பூரின் புகழ்பெற்ற மவுண்ட் எலிசபெத் மருத்துவமனையில் பரிசோதனைகளுக்காக சென்றிருந்த கோத்தாபய ராஜபக்ச, அவசர சிகிச்சைப் பிரிவின் அனுமதிக்கப்பட்டு உடனடியாக இதய அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இதையடுத்து, அவரது உடல் நிலை சீரடைந்து, தற்போது மருத்துவமனையில் இருந்து வெளியேறி, சிங்கப்பூரில் உள்ள தங்குமிடம் ஒன்றில் கோத்தாபய ராஜபக்ச ஓய்வெடுத்து வருகிறார்.
நான்கு வாரங்கள் அவர் படுக்கையில் இருந்து ஓய்வெடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.
கருத்து தெரிவிக்க