நோய் வருமுன் காக்கும் வழிகளையும், வந்தால் கடைபிடிக்க வேண்டிய உணவு பழக்க முறைகளையும் தெரிந்து கொள்ளுதல் நன்று.
நோய் வருமுன் காக்கும் வழிமுறைகள்
விழிப்புணர்வு என்பது அனைத்துப் பிரிவுகளிலும் நன்கு வளர்ந்தே உள்ளது. அதுவும் மருத்துவ துறையில் மக்களிடையே விழிப்புணர்வு மிகவும் நன்றாகவே வளர்ந்துள்ளது.
நோய் வருமுன் காக்கும் வழிகளையும், வந்தால் கடை பிடிக்க வேண்டிய உணவு பழக்க முறைகளையும் மக்கள் நன்று அறிந்து கடை பிடித்து வருகின்றனர்.
அந்த வகையில் மேலும் சில தகவல்களை பகிர்ந்து கொள்கின்றோம்.
* கோலா குடிக்கும் பழக்கம் விழிப்புணர்வு காரணமாக குறைந்துதான் உள்ளது. லஸ்ஸி, இளநீர், எலுமிச்சை சேர்ந்த நீர், சுத்தமான நீர் இவைகளை நம் பழக்கத்தில் புகுத்திக் கொண்டால் ஆரோக்கியம் நன்கு கூடும். கோலா பழக்கத்தினை விட்டவர்கள் பல நோய்களில் இருந்து மீண்ட அதிர்ஷ்டசாலிகள் என்றே கூறலாம்.
* நாள் ஒன்றுக்கு 20 நிமிடங்கள் நடைபயிற்சி செய்ய வேண்டும். இதற்கு விடுமுறை விட வேண்டாம். காலையோ மாலையோ கட்டாயம் 20 நிமிடம் நடக்க வேண்டும். இருதய செயல்பாடு சீராக இருப்பதுடன் மூளைக்கும் நல்ல ரத்த ஓட்டம் கிடைப்பதால் மூளை சுறுசுறுப்புடனும் ஞாபகத் திறனுடனும் செயல்படுகின்றது.
* 8 மணி நேரம் தூங்குங்கள். இது ஆரோக்கியத்தின் முக்கிய அடிப்படைகளில் ஒன்று. நோய் எதிர்ப்பு சக்தி கூடும். உடல் சீர் செய்யப்பட்டு புத்துணர்வு பெறும்.
* மா சத்து உணவுகளை குறையுங்கள். அரிசி, கோதுமை, நொறுக்குத்தீனி இவற்றினை குறைத்தாலே எடையும் குறையும். ஆரோக்கியமும் கூடும். இட்லி, தோசை, இடியாப்பம் போன்ற வகைகளும் அரிசி பிரிவிலேயே வருகின்றன. ஜூஸ் என்றாலே அப்பிள், மாதுளை, என்ற நினைப்புதான் அநேகருக்குத் தோன்றுகிறது. பழங்களை உரித்து வெட்டி சாப்பிடுங்கள் என்றே அறிவுறுத்தப்படுகின்றது. ஆனால் சோற்றுக் கற்றாழையினை ஜூஸாக அருந்தலாம்.
* ஆளி விதை பொடியினையும் சிறிதளவு பட்டை பொடியினையும் சுடுநீரில் கலந்து டீ போல் அருந்தலாம்.
* வெண்டைக்காய், வெள்ளை பூசணி இவைகளை ஜூஸ் செய்தும் அருந்தலாம்.
* வெள்ளை முள்ளங்கியினை துருவி சாலட்டில் கலந்து உண்ணலாம்.
* கிரீன் டீ எடுத்துக் கொள்ளலாம்.
* பூண்டு ஏதாவது ஒரு விதத்தில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
இவைகளை நாம் தினமும் செய்து வந்தாலே நோய்களை கட்டுப்படுத்தலாம்.
கருத்து தெரிவிக்க