ஜப்பானில் நடைபெறும் ஜி–20 மாநாட்டின் இடையில் தம்மை சந்திக்க சீன ஜனாதிபதி மறுத்தால், சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 10 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் உயர்த்தினார்.
அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்தது.
இதன்காரணமாக இரண்டு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகப்போர் உருவானது.
இந்த நிலையில் ஜப்பானின் எதிர்வரும் 28, 29–ந் திகதிகளில் நடைபெறும் ஜி–20 மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் கலந்துகொள்கிறார்கள்.
இந்த மாநாட்டுக்கு இடையில் இருநாட்டு தலைவர்கள் சந்தித்து பேசுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும் சீன ஜனாதிபதி தம்மை சந்திக்க மறுத்தால், சீன பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என டொனால்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கருத்து தெரிவிக்க