ஐஎஸ் பயங்கரவாதிகள்; இலங்கையில் உயிர்த்த ஞாயிறன்று நடத்திய தாக்குதல்களின் பின்னர் விசாரணைகளில் இலங்கைக்கு உதவும் இந்திய தேசிய புலனாய்வு முகாமை அதிகாரிகள் இன்று தமிழகத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
கோவையில் உக்கடம், போத்தனூர், குனியமுத்தூர் உள்ளிட்ட 8 இடங்களில் தேசிய புலனாய்வு முகாமை (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் இன்று காலை 6 மணி முதல் சோதனையில் ஈடுபட்டதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கோவை உக்கடத்தில் ஐஎஸ்ஸ_டன் தொடர்புடையவர்கள் என்று கருதப்படும் அசாருதீன், போத்தனூரில் சதாம், அக்ரம் ஜிந்தா ஆகியோரது வீடுகளில் காவல் துறை அதிகாரிகளின் உதவியுடன் சோதனை இடம்பெற்றது.
இதேபோன்று குனியமுத்தூரில் அல் உலமா அமைப்பின் தலைவர் அபுபக்கர் சித்திக் உட்பட 8 பேரின் வீடுகளில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நடத்தி வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க