உள்நாட்டு செய்திகள்புதியவை

மைத்திரிக்கு பதிலடிகொடுத்தார் ரணில்!

” நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை கட்டுப்படுத்தும் அதிகாரம் நிறைவேற்று அதிகாரத்துக்கு கிடையாது.” என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளுக்குமிடையிலான விசேட சந்திப்பொன்று இன்று பிற்பகல் அலரிமாளிகையில் நடைபெற்றது.

இதன்போது, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அமர்வுகள் நிறுத்தப்படும்வரை தான் அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டப்போவதில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு குறித்து சிவில் அமைப்புகளின் பிரதிநிகள், பிரதமரின் நிலைப்பாட்டை வினவினர்.

இதற்கு பதிலளித்த பிரதமர், நாடாளுமன்ற விவகாரங்களில் அமைச்சரவையோ அல்லது பிற நிறுவனங்களோ தலையிடமுடியாது.

அத்துடன், அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றாவிட்டால் அமைச்சரவைக் கலைந்துவிட்டதாக அர்த்தப்படாது. நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக்கூறவேண்டிய கட்டமைப்பே அமைச்சரவையாகும். எனவே, இது விடயத்தில் குழம்பவேண்டியதில்லை.” என்றார்.

கருத்து தெரிவிக்க