வடக்கு செய்திகள்

‘ஆரம்ப சுகாதார வலுவூட்டல் திட்டம்’ பேசாலையில் ஆரம்பம்

ஆரம்ப சுகாதார வலுவூட்டல் திட்டங்களுக்கான ஆரம்ப நிகழ்வு இன்று பேசாலை பிரதேச வைத்தியசாலையில் வைபவ ரீதியாக இடம்பெற்றது.

இந்த நிகழ்வு மன்னார் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரீ.காண்டீபன் தலைமையில் இடம் பெற்றது.

இந்த திட்டத்திற்காக 35 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சின் இந்த திட்டத்தினூடாக வெளி நோயாளர் பகுதி கணினி மயமாக்கள், ஆய்வு கூடங்கள், பரிசோதனைகள், இன்னும் பல்வேறு வசதிகளுடன் மன்னார் பொது வைத்தியசாலையுடனான இணைப்புகள், உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் 5 ஆண்டுத்திட்டமாக நடை முறைப்படுத்தப்பட உள்ளன.

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்றாஸ், மன்னார் உதவி பிரதேசச் செயலாளர் சிவசம்பு கணகாம்பிகை, மாகாண சுகாதார அதிகாரிகள், வைத்தியர்கள்மற்றும்  வைத்திய அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மன்னார் மாவட்டத்திற்கான குறித்த திட்டத்தில் முதற்கட்டமாக அடம்பன் மற்றும் பேசாலை வைத்தியசாலைகளில் அபிவிருத்திப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டள்ளன

கருத்து தெரிவிக்க