வடக்கு செய்திகள்

மன்னாரில் ‘சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்’ நிகழ்வு

‘சமயங்களினூடாக நல்லிணக்கம் காணல்’ எனும் தொணிப்பொருளில் நிலை மாற்று கால நீதி தொடர்பான கருத்து பரிமாற்ற நிகழ்வு இன்று மாலை மன்னார் புனித சவேரியார் பெண்கள் தேசிய பாடசாலையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வு மாணாவர்கள் மத்தியில் இன ரீதியான ஒற்றுமையை ஏற்படுத்தும் வகையில் தேசிய சமாதான பேரவையினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

நாட்டில் இடம் பெற்ற யுத்த சூழ்நிலை மற்றும் அண்மைக்காலமாக நாட்டில் இடம் பெற்று வரும் இன, மத முறுகள் தொடர்பாக வெளிப்படையான கலந்துரையாடல் மூலம் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் வகையில் நிகழ்வு இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் தேசிய சமாதான பேரவை உறுப்பினர்கள் , மன்னார் துயர் துடைப்பு மறுவாழ்வு சங்க ஊழியர்கள் , மூம்மதத்தை சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டதுடன் நிகழ்வில் மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் பந்துல வீரசிங்கவும் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.

கருத்து தெரிவிக்க