முன்னாள் ஆளுநர் அசாத்சாலி மற்றும் இரண்டு மௌலவிமார் விசேட நாடாளுமன்ற தெரிவு குழுவில் முன்னிலையாகியுள்ளனர்.
ஏப்ரல் 21ஆம் திகதி இலங்கையில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழுவின் 4 ஆம் அமர்வு இன்று இடம்பெறுகின்றது.
நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்ரமரத்ன இதற்கு தலைமை தங்குகிறார்.
இந்நிலையில் மேல்மாகாண ஆளுநர் அசாத் சாலி, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா உறுப்பினர் மற்றும் காத்தான்குடி பள்ளிவாசல்கள் முஸ்லிம் சம்மேளன தலைவர் ஆகியோர் சாட்சியம் அளிக்கவுள்ளனர்.
இந்த தெரிவுக்குழுவில் முன்னாள் அமைச்சர் ரவுப் ஹக்கீம், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மக்கள் பிரதிநிதிகளான ரவி கருணாநாயக்க ,ராஜித சேனாரத்ன,எம். ஏ சுமந்திரன் உள்ளிட்ட பலர் உறுப்பினர்களாக உள்ளனர்.
இந்த குழுவின் இறுதி அமர்வில் பாதுகாப்பு செயலாளர் சாந்த கோட்டேகொட, தேசிய புலனாய்வு பிரிவின் முன்னாள் தலைமை அதிகாரி டி.ஐ.ஜி.சிசிர மெண்டிஸ் ஆகியோரிடம் சாட்சியம் பெறப்பட்டிருந்தது.
கருத்து தெரிவிக்க