ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக குற்றவியல் பிரேரனையொன்றை கொண்டுவந்து அவரை பதவியிலிருந்து விலக்க வேண்டுமென வணக்கத்திற்குரிய தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தம்பர அமில தேரர் இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களுக்கு வழியமைத்துக் கொடுத்தது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவே என அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
நம்பிக்கையில்லாப் பிரேரனையொன்றின் மூலம் அவரை பதவி விலக்கி அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றங்களின் அடிப்படையில் நீதிமன்றில் வழக்குத் தொடுக்க வேண்டுமெனவும் தம்பர அமில தேரர் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க