மொறட்டுவை மாநகராராட்சி தலைவர் சமன் லால் பெர்னான்டோ சாகும் வரையிலான உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளார்.
தச்சு தொழிற்சாலைகளை மூடுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள அறிவிப்பை எதிர்த்தே அவர் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
ஜனாதிபதி தனது முடிவை மாற்றிக்கொள்ளும் வரையில் தாம் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
சூழலை பாதுகாக்கும் நோக்கில் தச்சு தொழிற்சாலைகள் இன்னும் 5 வருடங்களில் மூடப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த தொழிற்சாலைகள் மூடப்பட்டால் ஆயிரக்கணக்கான மக்கள் தொழில் வாய்ப்பை இழக்க நேரும் என்பதால் இந்த திட்டதை மீள்பரிசீலனை செய்யுமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க