புதியவைவணிக செய்திகள்

எரிபொருள் விலை திருத்தம்

நேற்று (மார்ச் 31) முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி ஒரு லீற்றர் ஒட்டேன் 95 ரக பெற்றோலின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 361 ரூபாவாகும். 92 ரக ஒக்டேன் பெற்றோல் லீற்றரின் விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு அதன் புதிய விலை 299 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை சுப்பர் டீசல்,ஒட்டோ டீசல் மற்றும் மண்ணெண்ணெய் விலைகளில் மாற்றம் ஏற்படவில்லையென இலங்கை கனியவளக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

கருத்து தெரிவிக்க