நேற்று (நவம்பர் 08) லிபியா தலைநகரான திரிபோலிக்கு மேற்கேயுள்ள ஜான்சூர் மாவட்டத்தில் தங்கி பணிபுரியும் புலம்பெயர் தொழிலாளர்களின் குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
அதற்கிணங்க குறித்த கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 7 பேர் உயிரிழந்துள்ளனரெனவும் மேலும் சிலர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனரெனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க