இலங்கை சிங்கள பௌத்த நாடாகும். எனவே, இக்கோட்பாட்டை ஏற்க மறுக்கும் நபர்களை மக்கள் நிராகரிக்கவேண்டும்.” – என்று பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்தார்.
இன்று நடைபெற்ற ஆன்மீக நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது,
” இலங்கையில் நடைபெற்ற சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்பான விசாரணைகள் உரிய வகையில் இடம்பெறுவதில்லை. கடந்த காலங்களில் அவ்வாறே நடந்தும் உள்ளன.
சிறியவர்களுக்கு ஒரு விதத்திலும், அதிகாரம் படைத்தவர்களுக்கு வேறொரு விதத்திலுமே சட்டம் செயற்பட்டதை காணமுடிந்தது.
இன்று நேற்று அல்ல 70 வருடங்களாகவே இந்நிலைமை நீடிக்கின்றது. எனவே, ஏப்ரல் 21தாக்குதல்கள் தொடர்பான விசாரணையும் உரிய வகையில் இடம்பெறுமா என்ற சந்தேகம் எனக்கு ஏற்படுகின்றது.
இலங்கை சிங்கள, பௌத்த நாடாகும். இதை முன்புகூட நான் வலியுறுத்தியுள்ளேன். என்னை சந்திக்கவந்த அமெரிக்க தூதுவரிடம்கூட எடுத்துக்கூறினேன்.
எனவே, இவ்விவகாரத்தில் எவரும் கைவைக்ககூடாது. அதற்கு எதிராக செயற்படுபவர்களை மக்கள் நிராகரிக்கவேண்டும்.” என்றார் பேராயர்.
கருத்து தெரிவிக்க