தொழில்நுட்ப கல்லூரிகள் மற்றும் திரையரங்குகளை மீள இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப கல்லூரிகள், தொழிற்பயிற்சி மத்திய நிலையங்கள் மற்றும் ஜேர்மன் தொழிற்பயிற்சி நிலையங்களை ஜூலை 6 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பிக்க தொழில் அமைச்சு தீர்மானித்துள்ளது. சுகாதார அமைச்சின் பரிந்துரைகளின் படி இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டில் 39 தொழில்நுட்ப கல்லூரிகள் காணப்படுகின்றன. இந்தக் கல்லூரிகளில் 110,000 இற்கும் அதிக மாணவர்கள் கல்வி கற்கின்றனர்.இதேவேளை ஜூலை 20 ஆம் திகதி முதல் திரையரங்குகளை மீள திறப்பதற்கு அனுமதி வழங்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கலாசார அமைச்சு தெரிவித்துள்ளது. திரையரங்கு உரிமையாளர்களுடன் நேற்று முன்தினம் இடம்பெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் இதற்கான கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் பந்துல ஹரிஸ்பத்துவ தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க