இந்தியா

மணிப்பூரில் பெரும்பான்மையை இழந்தது பாஜக அரசு- ஆதரவை விலக்கியது என்.பி.பி.- ஆட்சி அமைக்கிறது காங்.

இம்பால்: மணிப்பூரில் முதல்வர் பைரேன் சிங் தலைமையிலான பாஜக கூட்டணி அரசு பெரும்பான்மையை இழந்துவிட்டது. பைரேன் சிங் ஆட்சிக்கான ஆதரவை என்.பி.பி. கட்சி மற்றும் சுயேட்சைகள் வாபஸ் பெற்றன. இதனால் மணிப்பூரில் காங்கிரஸ் புதிய ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளது.

2017-ம் ஆண்டு மணிப்பூர் சட்டசபைக்கான தேர்தல் நடைபெற்றது. 60 இடங்களைக் கொண்ட மணிப்பூர் சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் 28 இடங்களிலும் பாஜக 21 இடங்களிலும் வென்றது.

ஆனால் பாஜகவோ, பிற மாநிலங்களைப் போல அதிகாரத்தைக் கைப்பற்ற ஆபரேஷன் தாமரையை களமிறக்கியது. பாஜகவின் வலையில் என்.பி.பி, என்.பி.எப், எல்.ஜே.பி, சுயேட்சைகள் சிக்கின. இதனால் மணிப்பூரில் பைரேன்சிங் தலைமையில் பாஜக அரசு அமைந்தது.

தற்போது பைரேன்சிங்குக்கான ஆதரவை 4 எம்.எல்.ஏக்களைக் கொன்ட என்.பி.பி. விலக்கிக் கொண்டது. பாஜகவின் 3 எம்.எல்.ஏக்களும் காங்கிரஸ் கட்சியில் இணைந்துவிட்டனர். 2 சுயேட்சைகளும் அரசுக்கான ஆதரவை திரும்ப பெற்றனர். இதனால் மணிப்பூரில் பைரேன்சிங் அரசுக்கு 18 எம்.எல்.ஏக்கள் ஆதரவுதான் உள்ளது.
இதனால் மணிப்பூரில் பாஜக அரசு பெரும்பான்மையை இழந்தது. இதனையடுத்து மணிப்பூரில் புதிய அரசு அமைக்க உரிமை கோரியுள்ளது காங்கிரஸ் கட்சி.

கருத்து தெரிவிக்க