புதியவைவிளையாட்டு செய்திகள்

சர்வதேச கிரிக்கட்டில் இருந்து ஓய்வு பெரும் யுவராஜ்சிங்

இந்திய கிரிக்கட் அணிக்காக 19 ஆண்டுகளாக விளையாடிய இந்திய அணி வீரர் யுவராஜ் சிங், ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தமது ஓய்வு தொடர்பில் அவரது அறிவிப்பில், “22 அடிகளில் எனது 25 ஆண்டு கிரிக்கட் வாழ்க்கை இருந்தது. 17 ஆண்டுகள் சர்வதேச கிரிக்கட் போட்டிகளில் விளையாடினேன். இப்போது இவை அனைத்துக்கும் விடைகொடுக்கலாம் என்று முடிவெடுத்துள்ளேன்.

கிரிக்கட்தான் எனக்கு எப்படி போராடுவது, எப்படி வீழ்வது, எப்படி அதைத் துடைத்தெறிந்து எழுவது, எப்படி முன்னோக்கிச் செல்வது என எல்லாவற்றையும் கற்றுக் கொடுத்தது” என்று தெரிவித்துள்ளார்.

2003 ஆம் ஆண்டு இந்தியாவுக்காக முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாடினார் யுவராஜ். அதைத் தொடர்ந்து 2007 ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கிண்ண அணியில் அவர் இடம் பிடித்தார்.

40 டெஸ்ட் போட்டிகள் விளையாடியுள்ள யுவராஜ், 33.92 சராசரியில் 1900 ஓட்டங்களை குவித்துள்ளார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 3 சதம் மற்றும் 11 அரைசதங்களை அடித்துள்ளார். அவர் 2007-ல் பெங்களூரில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அதிகபட்சமாக 169 ஓட்டங்களை குவித்தார்.

கருத்து தெரிவிக்க