உள்நாட்டு செய்திகள்கொழும்பு செய்திகள்சிறப்பு செய்திகள்புதியவைமுக்கிய செய்திகள்

இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுக்கும் அமெரிக்கா!

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய குழுவினருடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறித்த தாக்குதல் தொடர்பில் அமைக்கப்பட்ட விசாரணைக் குழுவின் நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ள நிலையில் தீவிரவாதக் குழுவுடன் தொடர்புடையோருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்க வேண்டுமென அமெரிக்கா அழுத்தம் கொடுப்பதாக த சண்டே மோர்னிங் செய்தித்தாள் செய்தி வெளியிட்டுள்ளது.
21ம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் உயிரிழந்தவர்களில் அமெரிக்க பிரஜைகளும் இருப்பதால் தொடர்புடையவர்கள் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன.
கொழும்பிலுள்ள 3 ஹோட்டல்கள் மற்றும் மூன்று தேவாலயங்கள் தெஹிவளையில் இருந்த சிறு உல்லாச விடுதி ஆகியவற்றின் மீதான தாக்குதலில் சுமார் 45 சுற்றுலாப் பயணிகள் இந்த தாக்குதல் சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.
சினமன் கிராண்ட் ஹோட்டலில் காலை உணவை எடுப்பதற்குச் சென்ற அமெரிக்காவைச் சேர்ந்த செல்சி டெகமினடா அந்த தாக்குதலில் உயிரிழந்தார்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை மேற்கொள்ள உதவுவதற்காக அமெரிக்காவின் எப்.பி.ஐ.ஐ கொழும்புக்கு அனுப்ப அமெரிக்கா இலங்கை உயர்தரப்பிடம் கேட்டிருந்ததாக அந்த செய்தித்தாளில் குறிப்பிடப்பட்டிருந்தது.
எப.பி.ஐ தற்போது கொழும்பில் இருந்து இந்த விசாரணை நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்தும் இடம்பெற்று வருவதாக அந்த பத்திரிகை மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

கருத்து தெரிவிக்க