இன்று (ஏப்ரல் 19) இந்தியாவின் பெங்களூரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்த கொழும்பு 10 ஐ சேர்ந்த பெண்ணொருவர் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட குஷ் போதைப்பொருட்களுடன் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரிடமிருந்து 03 கிலோ 290 கிராம் குஷ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதோடு கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
கருத்து தெரிவிக்க