இந்த நாட்டில் அனைவரும் சுற்றாடலை பாதுகாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இல்லையெனில் தண்ணீரை பணம் கொடுத்து வாங்குவது போன்று சுத்தமான காற்றினையும் வாங்கும் நிலை உருவாகும் என போரதீவுப் பற்று பிரதேச செயலகத்தின் உதவி பிரதேச செயலாளர் எஸ்.புவனேந்திரன் தெரிவித்தார்.
உலக சுற்றாடல் தினத்தினை முன்னிட்டு பிரதேச செயலாகத்தின் ஏற்பாட்டில் பழுகாம் கண்டுமணி மகாவித்தியாலயத்தில் அதிபர் ஆ.புட்கரன் தலைமையில் திங்கட்கிழமை (10) நடைபெற்ற விசேட நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலையே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றகையில், அனைத்து நாடுகளும் சுற்றாடலை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதற்காக சுற்றாடல் தினமானது உருவாக்கப்பட்டுள்ளது. நாங்கள் சுற்றாடலை மாசு படுத்தினால் அது எமக்கு பாதிப்பினை தருகிறது.நாம் சொல்லலை பாதுக்காக்க வேண்டும்.
உலகளாவிய ரீதியில் வளி மாசடைதல் அதிகரித்து வருகின்றது. இவ்வாறான நிலைக்கு தற்போது நம் நாட்டில் குறைவு எனினும் , இன்று சீனா போன்ற பல நாடுகளில் சுவாசத்திற்கான காற்றினை பையில் அடைத்து விற்பனை செய்கின்ற நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோல பிளாஸ்டிக் குப்பைகளை வீசியெறிதல்,காடுகளை அழித்தல் போன்றவற்றால் கடல் மாசு, புவி வெப்படைதல் ஆகிய பாதிப்பு ஏற்பட்டு வருகிறது.
எனவே அனைவரும் ஒன்றிணைந்து சூழலை பாதுகாப்பதன் மூலம் எதிர்காலத்தில் சந்ததிக்கும் சிறந்த சூழலை கையளிக்க முடியும் என தெரிவித்தார்.
கருத்து தெரிவிக்க