தீவிரவாதத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட தெரிவுக் குழுவுடன் ஒரு சிலர் இணைந்து செயற்படாமையானது அவர்களது குற்றங்கள் வெளியாகும் என்ற அச்சத்தின் காரணமாகவே என ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.
காலி பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தெரிவுக்குழுவில் இணைவதற்கு சிலருக்கு சந்தர்ப்பம் இருந்த போதிலும் அதனை அவர்கள் புறக்கணித்து மத பேதம், இன பேதம் போன்றவற்றை ஏற்படுத்துவதற்கு முயற்சிப்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்துள்ளார்.
மிகக் குறுகிய காலத்தில் தீவிரவாதத்தை ஒழித்த நாடு என இலங்கை அடையாளப்படுத்தப்பட்டமைக்கு காரணம் முஸ்லிம் மக்கள் வழங்கிய ஒத்துழைப்பு என அவர் சுட்டிக்காட்டினார்.
அறிவுள்ள எந்தவொரு சிறுபான்மை இனத்தவரும் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.
அத்துடன் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறுவது ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரே என நாடாளுமன்ற உறுப்பினர் பந்துலால் பண்டாரிகொட தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க