கொழும்பு ஷங்கிரிலா ஹோட்டலில் தற்கொலைக் குண்டுத்தாக்குதல் மேற்கொண்ட குண்டுதாரிக்குச் சொந்தமானது எனக் கூறப்படும் வெல்லம்பிட்டி பிரதேசத்தில் அமைந்துள்ள செப்பு தொழிற்சாலையில் பணிபுரிந்த கருப்பையா ராஜேந்திரன் எனும் அப்துல்லாவுக்கு எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று கொழும்பு மேலதிக நீதவான் பிரியந்த லியனகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளையில் பிணையில் விடுதலை செய்யப்பட்ட சந்தேக நபர்கள் உட்பட 10 பேரும் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கருப்பையா ராஜேந்திரன் எனும் அப்துல்லாவை பிணையில் விடுதலை செய்வதற்காக அவரது சட்டத்தரணிகள் பிணை மனு கோரியிருந்தமை குறிப்பிடதக்கது.
இதனை ஆட்சேபித்த நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 24ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
பயங்கரவாத ஒழிப்புப் பிரிவினால் நீதிமன்றத்திற்கு முன்வைக்கப்பட்டுள்ள விடயங்களில், தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களை பயங்கரவாத ஒழிப்புச் சட்டத்தின் கீழ் விசாரணை செய்து வருவதாக தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க