சினிமா

நடிகர் கிரிஸ் கர்னாட் காலமானார்

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்த முதுபெரும் நடிகரான கிரிஸ் கர்னாட் (வயது 81 ) காலமானார்.

கிரிஸ் கர்னாட் தமிழில் ரட்சகன், காதலன், செல்லமே உள்ளிட்ட பல படங்களில் கதாநாயகிகளின் தந்தை கதாப்பாத்திரங்களிலும், வில்லனாகவும் நடித்தவர். மும்பையில் பிறந்த அவர், பத்மஸ்ரீ, பத்ம பூஷன் விருதுகளை வென்றவர்.

திரைப்படம் மட்டுமின்றி மேடை நாடகங்களின் மூலமும், திரைக்கதை எழுத்தாளராகவும் கலைத்துறைக்கு முக்கியப் பங்காற்றிய அவர் தனது 81-வது வயதில் பெங்களூரில் காலமானார்.

கருத்து தெரிவிக்க