இலங்கைமீது அரபு நாடுகள் பொருளாதாரத் தடைகளை விதிக்காது என சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.சிங்கள தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.“ முஸ்லிம் மக்கள் தேசப்பற்றாளர்கள். நாங்கள் இலங்கையை அதிகம் நேசிக்கின்றோம். இங்குதான் பிறந்தோம். இதே மண்ணில் மரணிக்கவே விரும்புகின்றோம். பிற நாடுகளுக்கு சென்று வாழமுடியாது.எனவே, பொருளாதாரத் தடைபோன்ற நடவடிக்கைகளுக்கு நாம் ஒருபோதும் ஆதரவளிக்கமாட்டோம். நாட்டின் நலனைக்கருதியே பதவிகளைக்கூட இராஜினாமா செய்தோம். நாட்டின் நலனுக்காக நாம் செய்த தியாகத்தை எவரும் பலவீனமாக கருதிவிடக்கூடாது.
அதேவேளை, முஸ்லிம் மக்களின் கலாசார விடயங்களில் உடனடியாக திணிப்புகளை செய்யக்கூடாது. புர்கா விவகாரம் உட்பட மேலும் சில விடயங்களில் விட்டுக்கொடுப்புகளை செய்வதற்கு மக்கள் தயாராகவே இருந்தனர். அதை தாமாக முன்வந்து செய்வதற்கு அவர்களுக்கு இடமளிக்கப்படவேண்டாம். அழுத்தங்களை பிரயோகித்து, மிரட்டி செய்ய முற்பட்டால்தான் பிரச்சினைகள் தலைதூக்கும்.” என்றும் ரவூப் ஹக்கீம் எம்.பி. குறிப்பிட்டார்.
கருத்து தெரிவிக்க