மேல்மாகாண ஆளுநர் பதவியை இராஜினாமா செய்த அஸாத் சாலிக்கு, வெளிநாட்டு தூதுவர் பதவி வழங்கப்படவுள்ளது என அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி சிங்கள வார இதழொன்று செய்தி வெளியிட்டுள்ளது.ரிஷாட் பதியுதீன், அஸாத் சாலி, ஹிஸ்புல்லா ஆகிய மூவரையும் பதவி விலகுமாறு வலியுறுத்தி அத்துரலிய ரத்தன தேரரால் தலதாமாளிகைக்கு முன்னால் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.இதற்கு ஆதரவு வலுத்ததால் முஸ்லிம் அரசியல்வாதிகளும், ஆளுநர்களும் கூட்டாக பதவி துறந்தனர்.இந்நிலையிலேயே அஸாத் சாலிக்கு ஆளுநர் பதவி வழங்கப்படவுள்ளது என ஜனாதிபதி செயலக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது என அந்த செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்து தெரிவிக்க