சினிமா

எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அஜித்தின் 60 வது திரைப்படம்

நேர் கொண்ட பார்வை திரைப்படத்தில் அஜித் நடித்து முடித்துள்ள நிலையில் அவரது 60 வது படம் தொடர்பான தகவல்களை ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில் அஜித்தின் 60 ஆவது படம் தொடர்பான விடயங்கள் கசிந்துள்ளன. தல அஜித்திற்காகவே உருவாக்கப்பட்ட இந்த கதையில் அவர் பைக் ஓட்ட வீரராக நடிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளில் படப்பிடிப்புக்கள் இடம்பெறவுள்ளதாகவும் இந்த படத்தில் உண்மையான பைக் ஓட்ட போட்டிகள் இடம்பிடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்து தெரிவிக்க