புணாணையிலிருந்து காத்தான்குடிக்கு சட்டவிரோதமான முறையில் அடைத்து வைத்து கடத்தி வரப்பட்ட 12 மாடுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடத்திவரப்பட்ட மாடுகளை கல்லடி மணிக்கூட்டுக்கோபுர சந்தியில் வைத்து இன்று(9) காலை பொலிஸார் கைப்பற்றினர்.
அத்தோடு கடத்தலுக்குப் பயன்படுத்திய லொறியும் கைப்பற்றப்பட்டதுடன் லொறியின் சாரதியும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளதுடன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து தெரிவிக்க