இனிவரும் காலங்களில் நாட்டின் தலைவர் யாராக இருப்பினும் நாட்டின் கொள்கைகள், முடிவுகள், தீர்மானங்களை எடுப்பதற்கு சட்டரீதியான தேசிய சபையொன்றை அமைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் நிறைவடைந்துள்ளதாக தேசிய சபையை இன்னும் ஓரிரு நாட்களில் நாட்டிற்கு வெளிப்படுத்தவுள்ளதாகவும் அத்துரலியே ரத்தன தேரர் தெரிவித்துள்ளார்.
இந்த தேசிய சபை தொடர்பாக அரசியல் பிரதிநிதிகளை இணைத்துக் கொள்ளாமல் மதத் தலைவர்கள் மற்றும் பொருளாதார, சமூக, தொழில் ஆகிய விடயங்களை உள்ளடக்கும் விதமாக நிபுணர்கள் இந்த சபையில் உள்வாங்கி இந்த சபையை அமைக்கவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
மேலும் இந்த சபையின் அனுமதியில்லாமல் எந்தவொரு தீர்மானமோ முடிவோ நாடாளுமன்றத்திற்கு முடியாமல் போகும் பட்சத்தில் இந்த நாட்டிற்கு தேவையான தீர்வினை இந்த சபையின் ஊடாக பெற்றுக் கொள்ள எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க