உண்ணாவிரத போராட்டத்தின் ஊடாக நாட்டில் தீர்மானம் எடுப்பதற்கு அழுத்தம் கொடுத்து அதனூடாக சிறுபான்மையினரை ஒழிப்பதற்கு முற்பாட்டால் தமது கட்சி முஸ்லிம் உறுப்பினர்களுக்கு ஒத்துழைப்பு வழங்குமென தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பிக்குமார்களினால் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்படும் அளுத்தம் காரணமாக தமிழ் மக்கள் முஸ்லிம் மக்களுடன் கைகோர்ப்பதை ஒருவராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் பிக்குமார்களின் உண்ணாவிரதத்தினால் நாட்டின் தீர்மானங்களை மாற்ற முடியுமானால் நாடாளுமன்றமொன்று நாட்டிற்கு ஏன் தேவைப்படுகிறது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான செயற்பாடுகள் ஒருபோதும் ஜனநாயகத்திற்கு ஒத்துவராது எனவும் உண்ணாவிரதத்தின் ஊடாக அரசில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்களை பதவி விலக்குவதனால் தொகுதியினருக்கு தேவையான விதத்தில் நாடு செயற்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாடாளுமன்ற தெரிவுக் குழுவை உடனடியாக ரத்து செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்துள்ள தீர்மானம் தொடர்பில் சுமந்திரன் கூறுகையில், நாடாளுமன்றத் தெரிவுக் குழு தொடர்பில் தீர்மானம் எடுப்பது நாடாளுமன்றத்தின் வேலையே அன்றி நிறைவேற்று அதிகாரத்தின் வேலையில்லையெனவும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் தொடரும் எனவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
கருத்து தெரிவிக்க