‘ நாட்டில் இனங்களுக்கிடையில் ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கு முழு ஒத்துழைப்பையும் வழங்குவதற்கு நான் தயாராகவே இருக்கின்றேன்.” – இவ்வாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சஇ முஸ்லிம் அரசியல்வாதிகளிடம் இன்று உறுதியளித்துள்ளார்.
அத்துடன் இக்கட்டான நிலையில் முஸ்லிம் அமைச்சர்கள் ஒன்றாக விலகியமை நெருக்கடியை ஏற்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான அமைச்சர் ரிஷாட் பதியுதீன் ‘ ஊடகனிடம்’ மேற்படி தகவலை வெளியிட்டார்.
அமைச்சுப் பதவிகளை துறந்த முஸ்லிம் அரசியல்வாதிகள், எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவைஇ கொழும்பிலுள்ள அவரது இல்லத்தில் இன்று முற்பகல் சந்தித்து சமகால அரசியல் நிலைவரங்கள் தொடர்பில் கலந்துரையாடினர்.
இதன்போது 21/4 தாக்குதலுக்கு பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிராக கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் தொடர்பிலும் கைதுகள் சம்பந்தமாகவும் எதிர்க்கட்சித் தலைவருக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின்போது மஹிந்த ராஜபக்சவின் கட்சியினரும் அதில் பங்கேற்றதை தாம் சுட்டிக்காட்டியதாக ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
அத்துடன் நாட்டின் இனங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள சந்தேகம் நீங்கி மீண்டும் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டுமெனில் அதற்கு உங்களின் ஒத்துழைப்பும் அவசியம் என மஹிந்தவிடம் முஸ்லிம் அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதற்கு பதிலளிக்கையிலேயே ஒத்துழைப்பை வழங்குவதற்கு தான் தயாராகவே இருப்பதாக மஹிந்த குறிப்பிட்டுள்ளதுடன்இ நாட்டில் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் தவறிவிட்டதாகவும்இ உஷாராக இருந்திருந்தால் 21/4 தாக்குதலைக்கூட தடுத்திருக்கலாம் என்றும் சுட்டிக்காட்டினார்
கருத்து தெரிவிக்க