நாட்டுக்காக ஒன்றிணைவோம் எனும் வேலைத்திட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று முல்லைத்தீவில் நடைபெற்றது.
இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ 21/4 தாக்குதலானது உயிர்களை பலியெடுப்பதற்காக மட்டுமே நடத்தப்பட்ட தாக்குதல் அல்ல. முஸ்லிம் பிரபாகரன் ஒருவரை உருவாக்கி நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துவதும் சதித்திட்டமாக இருந்துள்ளது.
எனவே, அந்த பொறிக்குள் சிக்கி, பயங்கரவாதிகளின் எண்ணங்களை ஈடேறசெய்வதற்கு இடமளிக்கவேண்டாம் என நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்.
வடக்கில் பிரபாகரன் உருவானதால் மூவின மக்களும்தான் பிரச்சினைகளை எதிர்கொண்டனர். , மீண்டும் அவ்வாறானதொரு யுகத்தை நாம் நினைத்தும் பார்க்கக்கூடாது.
நாம் அனைவரும் ஒற்றுமையாக வாழவேண்டும். வருட இறுதியில் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, வாக்குவேட்டைக்காக அரசியல்வாதிகள் மக்களை திசைதிருப்பக்கூடும். அது தொடர்பிலும் விழிப்பாகவே இருங்கள்.
இனம், மதம், மொழி, குலம் என அனைத்து விதத்திலும் பிளபுபட்டவர்களாகவே மக்கள் வாழ்கின்றனர். ஆகவே, அனைவரையும் ஒன்றிணைக்கும் நோக்கிலேயே நாட்டுக்காக ஒன்றிணைவோம் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.’’ என்றும் ஜனாதிபதி கூறினார்.
கருத்து தெரிவிக்க