“ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இனவாதி கிடையாது. இதன்காரணமாகவே அவருடன் இணைந்து பயணிக்கின்றேன்.” என்று வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் முல்லைதீவில் தற்போது (08) நடைபெற்றுவரும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“ இரத்தமும், கண்ணீரும் ஓடிய மண்ணிலிருந்துதான் உரையாற்றிக் கொண்டிருக்கின்றேன். மீண்டுமொரு முறை அவ்வாறானதொருநிலை இங்கு ஏற்படக்கூடாது. இதில் நாம் அனைவரும் உறுதியாக இருக்கவேண்டும்.
இந்த ஆட்சிமாறி, அடுத்த ஆட்சிவந்துவிட்டால் எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வு கிடைத்துவிடும் என யாராவது கருதுவீர்களானால் அது தவறான எண்ணமாகவே இருக்கும். காரணம் ‘ஜனநாயகம்’ என்ற ஒன்றே அனைத்துக்கும் தீர்வாக அமையும் என்பதே எனது நம்பிக்கையாகும்.
ஜனாதிபதியுடன் இணைந்து செயற்பட நான் முன்வந்தபோது, என்மீது சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். மைத்திரிபால சிறிசேன இனவாதி எனவும் கூறினர். ஆனால், தான் இனவாதி அல்லன் என்பதை ஜனாதிபதி உறுதிப்படுத்தியுள்ளார்.
இதை ஆய்வொன்றின்மூலம்கூட என்னால் உறுதிப்படுத்த முடியும். எனவேதான், அவருடன் இணைந்து செயற்படுகின்றேன்.’’ என்றார்.
கருத்து தெரிவிக்க