ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையில் இன்று நடைபெற்ற ஐந்தாம் சுற்று சந்திப்பில் பிரதான விடயங்கள் தொடர்பில் இறுதி முடிவு எட்டப்படவில்லை என தெரியவருகின்றது.
எனவே, எதிர்வரும் 17 ஆம் திகதி மீண்டும்கூடி ஆராய்வதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.
6 ஆம் சுற்று பேச்சுவார்த்தை எதிர்வரும் 17 ஆம் திகதி நடைபெறவுள்ளமை பொதுஜன பெரமுனவின் தலைவர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் உறுதிப்படுத்தினார்.
புதிய அரசியல் கூட்டணியை அமைக்க பொது இணக்கப்பாட்டை ஏற்படுத்துவதற்காக ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குமிடையிலான ஐந்தாம் சுற்று பேச்சுவார்த்தை கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று முற்பகல் நடைபெற்றது.
ஏற்கனவே கலந்துரையாடப்பட்ட விடயதானங்கள் இன்று மீள்பரிசீலனைக்குட்படுத்தப்பட்டுள்ளதுடன், எதிர்காலத்தில் பேசப்பட வேண்டிய விடயங்கள் பட்டியல் படுத்தப்பட்டுள்ளன.
எனினும், இணைத்தலைமைத்துவங்களை உருவாக்குதல், பதவி பங்கீடுகள், மத்திய மற்றும் நிறைவேற்றுகுழு உறுப்பினர்களின் எண்ணிக்கை, கூட்டணியின் சின்னம் உட்பட பிரதான விடயங்கள் தொடர்பில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை.
இந்நிலையிலேயே அடுத்த சுற்றுபேச்சுவார்த்தை 17 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
கருத்து தெரிவிக்க