ரஷ்யாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள சீன ஜனாதிபதி ஜீ ஜின்பிங், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் சந்தித்தார்.
சீன ஜனாதிபதிக்கு சிறப்பான வரவேற்பளித்த, ரஷ்ய ஜனாதிபதி அங்குள்ள நேவா நதியில் படகு பயணம் செல்வதற்கு அழைப்பு விடுத்தார்.
இந்நிலையில் இரு தலைவர்களும், படகு சவாரி செய்தனர். இதன்போது நதியின் இருமருங்கிலும் உள்ள கட்டடங்கள், நகரின் வரலாற்று சிறப்புகள் குறித்தும் ஜனாதிபதி புட்டின் , ஜீ ஜின்பிங்குக்கு விளக்கினார்.
இதைத் தொடர்ந்து விண்டர் மாளிகைக்கு சென்ற இருதலைவர்களும், பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
இருநாட்டு உறவுகள், தற்போதைய சர்வதேச சூழ்நிலை உள்ளிட்டவை குறித்து பேசப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கருத்து தெரிவிக்க