வெளிநாட்டு செய்திகள்

சவுதி அரேபிய மன்னரை அவமதித்த இம்ரான்கான்

ஈரானுக்கு எதிராக முஸ்லிம் நாடுகளை ஒன்று சேர்க்கும் விதமாக சவுதி அரேபியாவில், முஸ்லீம் நாடுகளின் கூட்டமைப்பு மாநாடு அண்மையில் நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும் பங்கேற்றார். மாநாடு நடைபெற்ற அரங்குக்கு வந்த இம்ரான் கானை, சவுதி மன்னர் சல்மான் பின் அப்துல் ஆசிஸ் தனது மொழி பெயர்ப்பாளருடன் வரவேற்றார்.

அப்போது இம்ரான் கானும், சல்மான் பின் அப்துல் ஆசிசும் புன்முறுவலுடன் கைகுலுக்கி கொண்டிருந்தனர். பின்னர் இருவரும் உரையாடிக் கொண்டிருக்கும் போதே, மன்னரிடம் தெரிவிக்கும்படி ஏதோ மொழி பெயர்ப்பாளரிடம் கூறிவிட்டு இம்ரான் கான் அங்கிருந்து நழுவினார்.

இந்த வீடியோ தற்போது டுவிட்டரில் வைரலாகி பரவி வருகிறது. இம்ரான் கான் மன்னரை அவமரியாதை செய்ததாகவும், அவரது நாகரிகமற்ற செயல் கண்டிக்கத்தக்கது எனவும் பலர் விமர்சித்து வருகின்றனர்.மேலும், இம்ரான் கானின் நடவடிக்கையால், மாநாட்டுக்கு பின்னர் நடக்க இருந்த இரு நாடுகளுக்கு இடையிலான பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கருத்து தெரிவிக்க