அழகு / ஆரோக்கியம்

அழகை தக்க வைத்துக் கொள்ள இயற்கை குளியல்

இயற்கை மூலிகைகளால் தயாரிக்கப்படும் குளியல் பொடியைப் பாவிப்பதனால் சருமம் பாதிப்படையாமல் பாதுகாப்பதுடன் சருமத்திற்கு தேவையான போசாக்கைத் தருகின்றன.

தேவையான பொருட்கள்

பெருஞ் சீரகம்….100 கிராம்

வெட்டி வேர்….200 கிராம்

சந்தனத் தூள் ….300 கிராம்

பூலான் கிழங்கு …200 கிராம்

பாசிப்பயறு …..500 கிராம்

கஸ்தூரி மஞ்சள் ….100 கிராம்

செய்முறை

இவற்றை தனித் தனியாக வெயிலில் காய வைத்து , பின் ஒன்றன் பின் ஒன்றாக தனித் தனியே அரைத்து , பின்னர் ஒன்றாக கலந்து வைத்துக் கொள்ளவும். ஈரம் படாமல் வைத்து இருக்க வேண்டும். தினமும் குளிக்கும் போது தேவையான அளவு எடுத்து நீரில் கலந்து தேய்த்து வந்தால் உடல் முழுவதும் நறுமணம் வீசும்.

இதனை தொடர்ந்து பாவித்து குளித்து வந்தால் தேகம் பளபளப்புடன் இளமையாக இருப்பதோடு. சொறி , சிரங்கு , தேமல் . படர்தாமரை , வேர்க்குரு . கண்களில் கருவளையம் . முகப்பரு . கரும்புள்ளிகள் போன்றன மறைந்து விடும்.

கருத்து தெரிவிக்க