வெளிநாட்டு செய்திகள்

வர்த்தக நிலையங்களை 24 மணிநேரம் திறந்து வைக்க அனுமதி வழங்கியது தமிழக அரசு

கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை 24 மணிநேரமும் திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.

தொழில் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையிலும், வேலைவாய்ப்பை பெருக்கும் நோக்கத்திலும் இந்திய மத்திய அரசு, சட்ட மசோதா ஒன்றை மாநில அரசுகளுக்கு வழங்கியுள்ளது.

தங்கள் தேவைக்கு ஏற்ப இந்த சட்ட அனுமதியை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் அம்மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது .

இந்நிலையில், இது தொடர்பில் தீவிரமாக ஆலோசித்து வந்த தமிழக அரசு, கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களை 24 மணி நேரமும் திறந்து வைக்க அனுமதி வழங்கி உள்ளது.

கருத்து தெரிவிக்க